என்ன செய்யும்? குரு,சுகரன், கேது,புதன் <> ஜோதிட சூட்சுமம்!

மாயம் செய்யும் குரு சுக்ரன் - ஜோதிட சூட்சுமம்
5,9ல் குரு சம்பந்தம் இருந்தால் ஒழுக்கமுள்ளவர் அவர்தான் குருக்களை மதிப்பவர். அவரே சிறந்த ஆன்மீகவாதி குருவும் கேதுவும் இந்தமாதிரி நல்ல கட்டத்தில் சேர்ந்துவிட்டால் மிகச்சிறந்த ஆன்மீகவாதியாக திகழ்வார்கள். புண்ணியங்கள் பல புரியும் ஆன்மீகப்பணிகளில் சிறந்து விளங்குவார்கள். குருஅரவான் சுவாமிகளுக்கு(guruaravan)  இப்படிதான் 9ல் குருவும் கேதுவும் அமைந்திருக்கிறது. ஏராளமான புண்ணிய காரியங்கள் செய்யும் யோகத்தை இது தரும். உண்மையான சமூக நல தொண்டர்களுக்கும் உண்மையான மக்கள் சேவகர்களுக்கும் மட்டுமே இத்தகைய யோகம் அமையும். சுக்கிரன் லக்கினத்தில் இருந்தால் சுகம் பல தருபவர். மற்றவர்களையும் சந்தோஷபடுத்துபவர். புதன் அறிவை தருபவர். சாமார்தியம், விவேகம், சமயோசித புத்தியை தருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்திருநதால் நல்ல யோகம் அமையும்.